விஷாலின் ‛ரத்னம்' ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு...!
ADDED : 627 days ago
'தாமிரபரணி, பூஜை' படங்களுக்குப் பிறகு இயக்குனர் ஹரி, நடிகர் விஷால் மீண்டும் இணைந்துள்ள படம் 'ரத்னம்'. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, கவுதம் மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படமும் ஒரு ஆக்ஷன் படமாகத்தான் உருவாகி வருகிறது. இருதினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக விஷால் தெரிவித்தார். மேலும் ‛‛இது குடும்பப் பாங்கான படம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விதத்தில் திரையில் பார்ப்பதற்கு இருக்கும்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வரும் கோடை விடுமுறையை குறிவைத்து வரும் ஏப்ரல் 26ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இந்தபடம் டப்பாகி ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.