தனுஷ் - வினோத் படம் குறித்து புதிய தகவல் இதோ!
ADDED : 880 days ago
துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு எச்.வினோத், நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தற்போது கமலை வைத்து வினோத் இயக்கும் படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.
இதனால் நடிகர் தனுஷின் புதிய படத்தை இயக்குவதற்கான பணிகளை தொடங்கியுள்ளார் வினோத். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கின்றார். இதன் படப்பிடிப்பை வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தொடங்குவதற்கான பணிகளில் வினோத் ஈடுபட்டு வருகின்றார் என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.