சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்பீர் கபூர், அலியா பட், விக்கி கவுசல்!
ADDED : 632 days ago
பத்மவாத், தேவதாஸ், பஜிரா மஸ்தானி போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியவர் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த 'கங்குபாய் கத்வாதி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து இவர் ஷாருக்கான் வைத்து 'இன்ஷா அல்லா' என்கிற படத்தை இயக்கவுள்ளதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து ஷாருக்கான் இந்த படத்தை விட்டு வெளியேறினார் என கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்து இயக்கும் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ரன்பீர் கபூர், அலியா பட், விக்கி கவுசல் ஆகியோர் இணைந்து நடிப்பதாக இன்று அறிவித்துள்ளனர். மேலும், இது 2025ம் ஆண்டில் திரைக்கு வருகிறது.