அமெரிக்கா - டாப் 5 வசூலில் இடம் பிடித்த 'ஹனுமான்'
ADDED : 666 days ago
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர் மற்றும் பலர் நடித்து பொங்கலுக்கு தெலுங்கில் வெளிவந்த படம் 'ஹனுமான்'. இப்படம் உலகம் முழுவதும் 250 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது.
அமெரிக்காவில் இப்படம் 5 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. அதிகப்படியான கட்டணமில்லாமல் சாதாரண கட்டணத்தில், 17 நாட்களில் இந்த வசூல் கிடைத்துள்ளதாம். முன்னணி இயக்குனர், ஹீரோ என இல்லாமல் இப்படியான வசூல் கிடைத்துள்ளது ஆச்சரியப்பட வைத்துள்ளது.
'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், சலார், பாகுபலி 1' ஆகிய படங்களுக்குப் பிறகு 5 மில்லியன் யுஎஸ் டால்ர் வசூலைப் பெற்ற படமாக 'ஹனுமான்' டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ளது.