உணவகம் தொடங்கிய சன்னி லியோன்!
ADDED : 645 days ago
பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்த சன்னி லியோன், சமீபகாலமாக தென்னிந்திய படங்களிலும் பரவலாக நடித்து வருகிறார். தமிழில் ஜெய் நடித்த வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர், அதன் பிறகு ஓ மை கோஸ்ட், தீ இவன், வீரமாதேவி போன்ற படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது நொய்டாவில் ‛சிக்கா லோகா' என்ற பெயரில் ஒரு ஹோட்டல் தொடங்கி இருக்கிறார் சன்னி லியோன். இந்த ஓட்டலில் ஆயிரம் ரூபாய் ஒருவர் கொடுத்தால் பல வெரைட்டி உணவுகளை அன்லிமிட்டாக சாப்பிடலாம் என்று ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக அவரது ஹோட்டலை தேடி வாடிக்கையாளர்கள் படை எடுப்பதாக கூறப்படுகிறது.