உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்களுடன் விஜய் ‛செல்பி'

படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்களுடன் விஜய் ‛செல்பி'

நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‛கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அரசியலில் குதித்துள்ள விஜய், தனது கட்சிக்கு ‛தமிழக வெற்றி கழகம்' என பெயரிட்டுள்ளார். எந்தவித பத்திரிகையாளர் சந்திப்போ, பொதுக்கூட்டமோ இல்லாமல் அரசியலில் நுழைந்ததை வெளிப்படுத்திய விஜய், கோட் படத்தை அடுத்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கோட் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் விஜய் ரசிகர்கள் குவிந்தனர். அப்போது படப்பிடிப்பு வாகனத்தின் மீது ஏறிய விஜய், ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அரசியலில் நுழைந்த பிறகு முதன்முறையாக ரசிகர்களை சந்தித்த விஜய்க்கு, ரசிகர்கள் மாலை வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட விஜய், கழுத்தில் அணிவித்தும், செல்பி எடுத்தும் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !