உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஷ்ணு விஷால், அருண்ராஜா காமராஜ் எதிர்பார்க்காத புதிய கூட்டணி

விஷ்ணு விஷால், அருண்ராஜா காமராஜ் எதிர்பார்க்காத புதிய கூட்டணி

நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர். அருண்ராஜா காமராஜ். கனா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமாகி வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 'நெஞ்சுக்கு நீதி' படத்தை இயக்கினார். சமீபத்தில் 'லேபிள்' என்கிற வெப் தொடர் ஒன்றை இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்றார். கடந்த சில வருடங்களாக இவர் ரஜினி, கார்த்தி, விஷால், நயன்தாரா போன்ற முக்கிய நட்சத்திரங்களோடு இணைந்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் மட்டும் வெளியானது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வேலையில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கின்றார் என இன்று திடீரென அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !