யூகிக்க முடியாத மர்மங்கள் நிறைந்த ஒரு நொடி
ADDED : 623 days ago
அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் படம் 'ஒரு நொடி. மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரித்துள்ளது. எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி, குரு சூரியா ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு இயக்குனராக கே.ஜி ரத்தீஷ் பொறுப்பேற்க, அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் மணிவர்மன் கூறும்போது “ஒரு நொடி' திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதை. ரசிகர்கள் யூகிக்க முடியாத மர்ம முடிச்சுகள் படத்தின் இன்னொரு பலம். படப்பிடிப்புகள் முழுமையடைந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் வெளிவருகிறது” என்றார்.