மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி!
ADDED : 1 hours ago
ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ‛கேம் சேஞ்சர்' படத்தில் நடித்த கியாரா அத்வானி, அதன்பிறகு ‛வார்-2' படத்தில் நடித்தார். பின்னர், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துவரும் ‛டாக்ஸிக்' என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வருகிறது. மேலும், 2025ம் ஆண்டு ஜூலையில் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த கியாரா அத்வானி, தற்போது தீவிர உடற்பயிற்சியில் இறங்கி தன்னை தயார்படுத்தி வருவதாக தெரிவித்திருப்பவர், 2026ம் ஆண்டிலிருந்து புதிய படங்களில் ஒப்பந்தமாக தான் தயாராக இருப்பதாகவும் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.