உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரத்னகுமாரின் '29'

ரத்னகுமாரின் '29'

மேயாத மான், ஆடை, குலு குலு போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் அதன்பின் லோகேஷ் கனகராஜின் குழுவில் மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களில் பணியாற்றினார். தற்போது மீண்டும் இயக்குனராக களமிறங்கி உள்ளார். இந்த படத்திற்கு 29 என பெயரிட்டுள்ளார். இதில் ரெட்ரோ படத்தில் நடித்த விது நாயகனாகவும், அயோத்தி புகழ் பிரீத்தி அஸ்ரானி நாயகியாகவும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் அறிமுக டைட்டில் வீடியோ வெளியாகி உள்ளது.

29 வயது இளைஞன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் நல்லது, கெட்டது தொடர்பான விஷயங்கள் தான் படத்தின் ஒருவரிக் கதை. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், ‛‛சென்னைக்கு வேல தேடி வந்து ஒரு வேலையும் கெடச்சி, நல்லது கெட்டது தீபாவளி பொங்கலு, ஓட்டு போடுறதுக்குனு மட்டும் சொந்த ஊருக்கு போற பல லட்சம் வெளியூர் பசங்கள்ல இவனும் ஒருத்தன். பேரு சத்யா, வயது 29'' என குறிப்பிட்டுள்ளனர். அழகிய காதல் உடன் கூடிய எமோஷனல் படமாக, வித்தியாசமான படமாக 29 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !