வதந்திகளுக்கு மீண்டும் முற்றுப்புள்ளி ஐஸ்வர்யா ராய்
ADDED : 611 days ago
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என சமீபத்தில் கூட ஒரு வதந்தி மீண்டும் பரவியது. அவற்றிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்
நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அபிஷேக் பச்சனுக்கு, “மிகுந்த மகிழ்ச்சி, அன்பு, அமைதி நல்ல உடல்நலம், கடவுள் ஆசீர்வாதம், பிரகாசத்துடன், உங்களுக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர் அபிஷேக், மகள் ஆராத்யா ஆகியோருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும், அபிஷேக்கின் குழந்தை காலத்து கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
அபிஷேக்கின் அக்கா ஸ்வேதா, அக்கா மகள் நவ்யா நந்தா, அப்பா அமிதாப் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.