மீண்டும் தள்ளிபோகிறதா தங்கலான்?
ADDED : 605 days ago
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‛தங்கலான்'. கோலார் தங்கவயல் பின்னணியில் வாழ்ந்த தமிழர்களை மையமாக வைத்து இந்த பட கதை உருவாகியுள்ளது. மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. முன்னதாக இப்படத்தை கடந்த டிசம்பரில் வெளியிட திட்டமிட்டனர். அதன்பின் ஜனவரிக்கு தள்ளிப்போய் பிறகு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவித்தனர். ஆனால் ஏப்ரலில் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற இருப்பதால் ரிலீஸை தள்ளி வைத்திருப்பதாகவும், தேர்தலுக்கு பின் படம் திரைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.