ரணம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ADDED : 613 days ago
இயக்குனர் செரிப் இயக்கத்தில்
நடிகர் வைபவ் தனது 25வது படமாக 'ரணம்' என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இதில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ்வதி மேனன் ஆகியோர் முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரோல் கரொலி இசையமைக்கும் இப்படத்தை
மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
ஏற்கனவே இந்த
படத்தின் டீசர் உடன் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என அறிவித்ததை
தொடர்ந்து இப்படம் வரும் பிப்.,23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என
புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.