உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலர் தினத்தில் ரீ ரிலீசாகும் ‛96' படம்

காதலர் தினத்தில் ரீ ரிலீசாகும் ‛96' படம்

கடந்த 2018ல் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா இணைந்து நடித்து வெளிவந்த படம் '96'. முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி இருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் உள்ள பின்னணி இசை இன்னும் பலரின் மொபைல் ரிங் டோன் ஆக உள்ளது.

இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று ‛96' படத்தை தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்வதாக விநியோகஸ்தர் கே.எம். சுந்தரம் சார்பில் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !