ஒரே நாளில் நயன்தாரா வெளியிட்ட இரண்டு வீடியோ!
ADDED : 606 days ago
அன்னபூரணி படத்தை அடுத்து டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. அதோடு தனது கணவர், மகன்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் நயன்தாரா, இன்றைய தினம் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் காரில் செல்லும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு மகனை வைத்திருக்கும் நயன்தாரா அவனது நெற்றியில் அன்போடு முத்தமிடுகிறார். அதேபோல் இன்னொரு மகனை தனது கையில் வைத்தபடி காரில் பயணிக்கிறார் விக்னேஷ் சிவன். மேலும், தனது நண்பர்கள், தோழிகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட இன்னொரு வீடியோவையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார் நயன்தாரா. இந்த இரண்டு வீடியோக்களுமே வைரலாகி வருகிறது.