குதிரையேற்ற பயிற்சி பெறும் சம்யுக்தா மேனன்
ADDED : 572 days ago
மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் 'களரி' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு தனுஷ் உடன் 'வாத்தி' படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் படம் 'சுயம்பு'. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படத்தை பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்குகிறார். நிகில் சித்தார்த் ஹீரோ. இது நிகிலுக்கு 20வது படம். அவரது ஜோடியாக சம்யுக்தா நடிக்கிறார். தெலுங்கு தவிர தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
இந்த படத்தில் சம்யுக்தா இளவரசியாக நடிக்கிறார். இதற்காக அவர் தற்போது குதிரையேற்ற பயிற்சி செய்து வருகிறார். சம்யுக்தா அடிப்படையில் களரி கற்றவர் என்பதால் அதோடு தொடர்புடைய வாள் சண்டை பயிற்சியை ஏற்கெனவே முடித்து விட்டார். தற்போது குதிரையேற்ற பயிற்சி செய்து வருகிறார்.