லெஜண்ட் சரவணன் படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்
ADDED : 864 days ago
பிரபல ஜவுளிக்கடை அதிபரான அருண் சரவணன், 'தி லெஜண்ட்' என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அவர் அடுத்த படத்தில் நடிப்பதற்காக நேரம் அதிகம் எடுத்து கதை கேட்டு வந்தார். கிட்டத்தட்ட ஓராண்டு ஆன நிலையில் சமீபத்தில் எதிர்நீச்சல், கொடி போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஆக ஜிப்ரான் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணன் முதல் படமான லெஜண்ட் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். தற்போது ஜிப்ரானுடன் பணியாற்ற உள்ளார் சரவணன்.