விடுதலை 2ம் பாகம் படப்பிடிப்பு இன்னும் இத்தனை நாட்களா?
ADDED : 759 days ago
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி இணைந்து நடித்த திரைப்படம் விடுதலை பாகம் 1. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி உடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்னும் விடுதலை 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு 30 நாட்கள் மீதமுள்ளது என கூறப்படுகிறது. இது அல்லாமல் பிளாஷ் பேக் காட்சிகளில் விஜய் சேதுபதியை இளைஞராக திரையில் கொண்டு வர சில தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர். இதற்காக படப்பிடிப்பு நிறைவு பெற்றதுடன் வெற்றி மாறன் அமெரிக்கா செல்ல உள்ளார் என்கிறார்கள்.