ஊமை கதாபாத்திரத்தில் அனுபமா
ADDED : 597 days ago
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் 'கொடி' படத்தில் நடித்தார். ஆனால், அதன் பிறகு தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. தெலுங்கில் ராம் பொத்தினேனி, நிதின், நானி, ரவி தேஜா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் அனுபமா பரமேஸ்வரன் 'சைரன்' படத்தில் நடித்துள்ளார். இதில் ப்ளாஷ்பேக் காட்சிகளில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதில் வாய் பேச முடியாத ஊமை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்கிறார்கள். இதனால் தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்கும் என அனுபமா எதிர்பார்க்கின்றார்.