உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெற்றி துரைசாமி மறைவு : குடும்பத்தினரிடம் நடிகர் அஜித் நேரில் ஆறுதல்

வெற்றி துரைசாமி மறைவு : குடும்பத்தினரிடம் நடிகர் அஜித் நேரில் ஆறுதல்

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி, இமாச்சலப் பிரதேசத்திற்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்று இருந்தார். சுற்றுலாவை முடித்துவிட்டு பிப்ரவரி நான்காம் தேதி காரில் அவர்கள் சென்னை திரும்பிய போது வரும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் அவர் பயணித்த கார் நிலை தடுமாறி சட்லெஜ் நதியில் கவிழ்ந்தது. இதில் எட்டு நாட்கள் தேடுதலுக்கு பிறகு நேற்று வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் இன்று மாலை சென்னை கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் வெற்றி துரைசாமியின் குடும்பத்தாருக்கு நடிகர் அஜித் குமார் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். அஜித்குமாரும், வெற்றியும் நெருங்கிய நண்பர்கள். வெற்றி வீட்டுக்கு அஜித் சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !