உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவி படத்திற்காக குதிரை ஏற்றம் பயிற்சியில் த்ரிஷா

சிரஞ்சீவி படத்திற்காக குதிரை ஏற்றம் பயிற்சியில் த்ரிஷா

பொன்னியின் செல்வன், லியோ படங்களுக்கு பிறகு விடாமுயற்சி, ராம், ஐடென்டிட்டி, தக்லைப் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் த்ரிஷா. அதையடுத்து தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் விஸ்வாம்பரா என்ற படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இப்படம் மூலம் சிரஞ்சீவியுடன் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார் த்ரிஷா. சரித்திர கதையில் இந்த படம் உருவாகிறது. இதில் ஒரு வீர பெண்மணியாக ஆக்ஷன் ரோலில் நடிக்கும் த்ரிஷா தனது வேடத்திற்காக தற்போது குதிரையேற்றம், களரி சண்டை போன்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !