தமிழில் தடம் பதிக்கும் மிருணாள் தாக்கூர்
ADDED : 602 days ago
நடிகை மிருணாள் தாக்கூர் ஹிந்தியில் நடித்த ஒரு சில படங்கள் பெரிதளவில் எதுவும் வெற்றி பெறவில்லை. இதன் பிறகு அவர் நடித்து தெலுங்கில் வெளிவந்த 'சீதா ராமம், ஹாய் நானா' போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி அடைந்தது. தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார்.
தெலுங்கைத் தொடர்ந்து தமிழ் படங்களில் இவர் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. அதன்படி, தமிழில் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் சிவகார்த்திகேயன் 23ம் படம் மற்றும் சிம்புவின் 48வது படம் என இரு படங்களிலும் கதாநாயகியாக நடிக்க மிருணாள் தாக்கூர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.