ஆபாச கமெண்டுகளுக்கு கனிகா பதிலடி
ADDED : 602 days ago
பிரபல திரைப்பட நடிகையான கனிகா தற்போது சின்னத்திரையில் எதிர்நீச்சல் நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் ஈஸ்வரி ரோலுக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் கனிகா மிகவும் மாடர்னாக புகைப்படங்கள் வெளியிடுவார். அதைபார்க்கும் பலரும் பலவிதமான கமெண்டுகள் கொடுத்து வந்தனர். அதில் சிலர் ஆபாசமாக வர்ணித்து சில கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து அண்மையில் பேசியுள்ள கனிகா, ‛‛திருமணமாகி கர்ப்பமானவர்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் மார்பகம் பெரிதாக தான் இருக்கும். அவ்வாறான ஹார்மோன் மாற்றம் தான் எனக்கும் அப்படி இருக்கிறது. இப்படி கொச்சையாக பேசுபவர்களை பார்க்கும் பொழுது அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று யோசிக்க தோன்றுகிறது' என கூறியுள்ளார்.