விஜய் சேதுபதி தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்
ADDED : 597 days ago
கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ருக்மணி வசந்த். தற்போது விஜய் சேதுபதியின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 23வது படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பதி பிரசாத் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இதற்கு முன்பு இதில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக அவர்கள் யாரும் படத்தில் கமிட் ஆகாத நிலையில் இப்போது ருக்மணி வசந்த் நடிப்பது உறுதியாகி உள்ளதாம்.