உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / த்ரிஷாவின் 'காதல் பூங்கொத்து' யார் அனுப்பியது?

த்ரிஷாவின் 'காதல் பூங்கொத்து' யார் அனுப்பியது?

காதலர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சினிமா பிரபலங்கள் சிலரும் காதலர் தின வாழ்த்துகளை ரசிகர்களுக்குப் பகிர்ந்து கொண்டார்கள்.

தமிழில் அடுத்த இன்னிங்ஸில் முன்னணியில் உள்ள நடிகை த்ரிஷாவும் காதலர் தினத்தை நேற்று கொண்டாடி உள்ளார். அழகான ரோஜாக்கள் அடங்கிய மிகப் பெரிய பூங்கொத்து ஒன்றுடன் இருக்கும் புகைப்படம், உயரப் பற என்ற வாசகத்துடன் இருக்கும் பூங்கொத்து புகைப்படம், நாய் ஒன்றைக் கொஞ்சும் புகைப்படம் ஆகியவற்றைப் பகிர்ந்து, “இது போல் சென்றது,” என காதலர் தினம் பற்றிப் பகிர்ந்துள்ளார்.

40 வயதாகும் த்ரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவருக்கு காதலர் தின வாழ்த்து சொல்லி பூங்கொத்து கொடுத்தது யாராக இருக்கும் என ரசிகர்கள் அந்த காதலரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். காதலுக்கு வயது ஏது?, எந்த வயதிலும் காதலையும், காதலர் தினத்தையும் கொண்டாடலாமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !