மகனை பெற்றெடுத்த ஸ்ரீபிரியா இளையராஜா
ADDED : 601 days ago
டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு தொடரில் நாயகியின் தங்கையாக ரோஜா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீபிரியா இளையராஜா. அதன்பின் சொல்லிக்கொள்ளும் வகையில் சீரியல்களில் நடிக்கவில்லை. பிரணவ் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்ட ஸ்ரீபிரியாவுக்கு கடந்த பிப்ரவரி 6ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை குழந்தையின் பிஞ்சு கை விரல்களை ஸ்ரீபிரியாவும் பிரணவ்வும் பிடித்தபடி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து சக நடிகர்களும், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.