சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் குயிலி
ADDED : 601 days ago
சினிமா நடிகையான குயிலி சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்கிற தொடரில் நடித்திருந்தார். அந்த தொடருக்கு பின் குயிலி சின்னத்திரையில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால், இம்முறை சீரியலில் நடிகையாக இல்லாமல் புதியதாக நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு 'வாழ்ந்து காட்டுவோம்' என பெயர் வைத்துள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பான 'சொல்வதெல்லாம் உண்மை' பாணியில் தயாராகி வரும் இந்நிகழ்ச்சியில் பிரச்னைகளுக்கு தீர்வளிக்க அந்தந்த துறைசார்ந்த வல்லுநர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.