கவுதம் மேனன் இயக்கியுள்ள ‛ஜோஸ்வா' மார்ச் 1-ல் ரிலீஸ்
ADDED : 596 days ago
கடந்த 2019ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கிய படம் ஜோஸ்வா இமை போல் காக்க. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த இந்த படத்தில் வருண், கிருஷ்ணா, யோகி பாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். என்றாலும் இந்த படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை. இந்த படத்திற்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு, துருவ நட்சத்திரம் போன்ற படங்களை இயக்கினார் கவுதம் மேனன். அந்த படங்களில் துருவ நட்சத்திரம் மட்டும் இன்னும் திரைக்கு வரவில்லை . இந்த நிலையில் தற்போது ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த ஜோஸ்வா இமைபோல் காக்க படம் வருகிற மார்ச் ஒன்றாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கவுதம்.