விக்ரம் 62வது படத்தில் மூன்று வில்லன்கள்?
ADDED : 593 days ago
நடிகர் விக்ரம் தற்போது 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இருமுகன், சாமி 2 படங்களை தயாரித்த சிபு தமின்ஸ் தயாரிக்கின்றார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கின்றார்.
ஏற்கனவே இந்த படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பதாக அறிவித்தனர். தற்போது கிடைத்த தகவலின் படி, எஸ்.ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் அல்லாமல் மேலும் இரண்டு வில்லன்கள் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் தெலுங்கு மூத்த நடிகர் உடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.