'படை தலைவன்' படப்பிடிப்பில் மீண்டும் சண்முகபாண்டியன்
ADDED : 616 days ago
மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் தற்போது 'படை தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அன்பு இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் இப்படம் உருவாகி வருகிறது.
அப்பா விஜயகாந்த்தின் உடல்நலக் குறைவு, மறைவு என அடுத்தடுத்து சோதனைகளால் இப்படத்தின் படப்பிடிப்பில் சரிவர கலந்து கொள்ளாமல் இருந்தார் சண்முகபாண்டியன். இந்நிலையில் 'மீண்டும் திரும்பிவிட்டேன்' என படத்தின் படப்பிடிப்புக்குத் திரும்பியது குறித்து புகைப்படத்துடன் அப்டேட் கொடுத்துள்ளார் சண்முகபாண்டியன்.
இப்படம் தவிர 'குற்றப்பரம்பரை' வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க உள்ளார் சண்முக பாண்டியன். அப்பா மறைவின் துயரத்திலிருந்து விடுபட்டு மீண்டும் நடிக்க வந்துள்ள சண்முக பாண்டியனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்.