மருத்துவமனை சிகிச்சையில் நிவிஷா
ADDED : 603 days ago
சின்னத்திரை நடிகை நிவிஷா, ‛தெய்வமகள்' சீரியல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் என தமிழின் பிரபல தொலைக்காட்சிகள் அனைத்திலும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, கடைசியாக மலர் தொடரில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வந்தார். ஆனால், அதிலிருந்தும் அண்மையில் திடீரென விலகிவிட்டார். அதன்பின் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்த நிவிஷா, சில நாட்களாக தனக்கு உடம்பு சரியில்லை என்றும் அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது மெதுவாக குணமாகி வருகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறேன் என பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள், நிவிஷா விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.