விரைவில் வெளியாகும் மங்கை-யில் ஷிவின்
ADDED : 603 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற ஷிவினுக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஷிவின் சினிமாவில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்றார்போல் மங்கை என்ற படத்தில் ஷிவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற மார்ச் 1ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் அந்த படத்தின் புரோமோஷனுக்காக ஷிவின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். படத்தின் நாயகன் ஆதித்யா கதிர், ஆனந்தி ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்களை ஷிவின் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.