உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லியோ 2 உருவாகுமா? : லோகேஷ் கனகராஜ் பதில்

லியோ 2 உருவாகுமா? : லோகேஷ் கனகராஜ் பதில்

விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக ரஜினியின் 171 வது படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார் . இந்த நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடத்தில், ரஜினி படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆரம்பகட்ட பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறினார்.

அதையடுத்து, விஜய்யின் லியோ-2 எப்போது தொடங்கும்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, லியோ-2 படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. விஜய் சம்மதித்தால் நான் ரெடிதான். ஆனால் விஜய்யின் எதிர்கால திட்டங்கள் வெகு உயரமாக இருக்கின்றன. அதனால் இந்த படம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றார் லோகேஷ் கனகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !