பிரியாணி விருந்து, படக்குழு உடன் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : 606 days ago
நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் நேற்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தின் நடித்து வரும் தனது 23வது படத்தின் படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன், அந்த பட குழுவினருக்கு தனது கையாலேயே பிரியாணி விருந்து பரிமாறினார். அதோடு சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடித்துள்ள 21வது படத்தின் டைட்டில் அமரன் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்தின் டீசரும் வெளியாகி பெரிய அளவில் வைரலாகி வருகிறது.