உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ரசிகர்களை சந்தித்த விஜய்

மீண்டும் ரசிகர்களை சந்தித்த விஜய்

அரசியல் கட்சியை அறிவித்து விட்ட விஜய், தற்போது கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து கோட் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு ரசிகர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளார்கள். ஏற்கனவே கடந்த மாதத்தில் ஒரு முறை படப்பிடிப்பு தளத்துக்குள் நின்ற வாகனத்தின் மேலே ஏறி நின்று வெளியில் நின்ற ரசிகர்களை பார்த்து கையசைத்து செல்பியும் எடுத்துக் கொண்ட விஜய், நேற்று மீண்டும் ரசிகர்களை பார்த்து படப்பிடிப்பு தளத்தில் உள்ள பில்டிங்கில் நின்றபடியே கையசைத்துள்ளார். கோட் படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடத்தில் நடித்து வரும் விஜய், மகன் வேடத்தில் தாடி மீசை இல்லாமல் இளமையான தோற்றத்தில் நடித்து வருகிறார். நேற்று அதே கெட்டப்பில்தான் ரசிகர்களை பார்த்து அவர் கையசைத்துளளார். அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !