உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீ-ரிலீஸாகும் அஜித்தின் பில்லா

ரீ-ரிலீஸாகும் அஜித்தின் பில்லா

80 காலகட்டத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'பில்லா' என்கிற படத்தை 2007ல் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ரீமேக் செய்திருந்தனர். இதில் நயன்தாரா, பிரபு, நமீதா, ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பின்னனி இசை இன்னும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. ரீ-மேக் படமும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சமீபகாலமாக தமிழில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் பரபரப்பாக நடைபெறுகிறது. தற்போது அஜித்தின் 'பில்லா 1' படத்தை வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே ரீ ரிலீஸ் ஆகி 3, மயக்கம் என்ன, வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது போன்று பில்லா படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !