உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட் பாடலாசிரியர் குல்சாருக்கு ஞானபீட விருது

பாலிவுட் பாடலாசிரியர் குல்சாருக்கு ஞானபீட விருது

பாலிவுட் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் குல்சார். அடிப்படையில் உருது கவிஞரான இவர் ஏராளமான ஹிந்தி படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார். 1963ம் ஆண்டு 'பண்டினி' என்ற படத்தில் இசை அமைப்பாளர் பர்மன் இவரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு ஆயிரக்கணக்கான பாடல்களை குல்சார் எழுதி உள்ளார். இதுதவிர ஏராளமான புத்தகங்களையும் எழுதி உள்ளார்.

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 5 முறை பெற்றுள்ளார். இதுதவிர பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சகேப் பால்கே விருதும் பெற்றுள்ளார். சிறந்த புத்தகங்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு 2023ம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இனி குல்சாருக்கு பத்மவிபூஷன், மற்றும் பாரத ரத்னா விருது மட்டுமே பாக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !