உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியன்-2 படத்தின் புதிய அப்டேட்!

இந்தியன்-2 படத்தின் புதிய அப்டேட்!


ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் 'இந்தியன் 2'. காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பீர்த் சிங், விவேக், மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இந்தியன் 3ம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறப்பட்டது. இப்போது வருகின்ற பிப்ரவரி 21ம் தேதி சென்னையில் இந்தியன்-2 படத்திற்காக சித்தார்த், பிரியா பவானி சங்கர் இருவர் சம்மந்தப்பட்ட காதல் பாடல் காட்சிகளை படமாக்க உள்ளனர். இதற்கான பிரமாண்ட அரங்கத்தை அமைத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !