வில்லன் கதாபாத்திரத்தில் சூரி?
ADDED : 594 days ago
நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் 'கொட்டுக்காளி'. இதனை 'கூழாங்கல்' பட இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்குகிறார். இதில் சூரி, அன்னா பென் இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தற்போது 74வது பெர்லின் திரைப்பட விழாவில் கொட்டுக்காளி படத்தை திரையிட்டு வருகின்றனர். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்கிறார்கள். மேலும், இந்த படத்தில் சூரி வில்லன் சாயல் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பார்க்கும் அனைவருக்கும் சூரியின் மீது வெறுப்பு உண்டாகும் அளவிற்கு அவரது நடிப்பு உள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.