உலகளவில் ரூ.50 கோடி வசூலைக் கடந்த பிரம்மயுகம் படம்
ADDED : 670 days ago
மலையாள நடிகர் மம்முட்டி நடித்து வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக கடந்தவாரம் வெளிவந்த படம் 'பிரம்மயுகம்' . ராகுல் சதாசிவன் இயக்கிய இப்படத்தை நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தனர். இத்திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக மம்முட்டியின் நடிப்பு அனைவரிடமும் பாராட்டு பெற்றது. மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்த நிலையில் இப்போது இப்படம் உலகளவில் ரூ. 50 கோடி வசூலைக் கடந்ததாக படக்குழு அறிவித்துள்ளனர்.