உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் இந்திய ஒளிப்பதிவாளர் : சந்தோஷ் சிவனுக்கு சர்வதேச விருது

முதல் இந்திய ஒளிப்பதிவாளர் : சந்தோஷ் சிவனுக்கு சர்வதேச விருது

இந்தியாவின் பிரபலமான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். தென்னிந்திய சினிமா மற்றும் ஹிந்தி சினிமாவிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். உருமி உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ளார். தேசிய விருது, பிலிம்பேர், பல்வேறு மாநில விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற இவருக்கு தற்போது ‛பியர் ஆஞ்சனியூஸ்' என்ற சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் ஒளிப்பதிவில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. வரும் மே 24ல் பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறது. இந்த விருதை பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !