ஜி.வி.பிரகாஷ் - ஷிவானி நடிக்கும் புதிய படம்
ADDED : 593 days ago
விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கியிருக்கும் பா.ரஞ்சித் தொடர்ந்து படங்களையும் தயாரித்து வருகிறார். தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கிறார். நட்சத்திர தம்பதியர் டாக்டர் ராஜசேகர் - ஜீவிதாவின் மகள் ஷிவானி நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. பசுபதி, லிங்கேஷ், விஸ்வாந்த் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பா.ரஞ்சித்தின் உதவியாளரான அகிரன் மோசஸ் என்பவர் இயக்குகிறார். அழுத்தமான நிஜ வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையிலான படமாக உருவாகிறது.