கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கும் ரஜினி மகள்?
ADDED : 646 days ago
இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. கடந்த 2021ஆம் ஆண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் ஒன்றை உருவாக்க இருப்பதாக கங்குலி அறிவித்திருந்தார். அப்போது கங்குலியாக நடிக்க அவர் ரன்பீர் கபூரை பரிசீலனை செய்தார். ஆனால், அதற்கான பணிகள் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
கங்குலியின் பயோபிக் படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் தயாரிப்பதாகவும், இதனை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் கங்குலியின் பள்ளி கால கட்டத்தில் துவங்கி பின்னர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகிறது என்கிறார்கள்.