ராஷ்மிகாவை வரவேற்ற ஜப்பான் ரசிகர்கள்
ADDED : 582 days ago
கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ்ப் படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெறும் கிரன்ச்சிரோல் அனிமே அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ளார்.
'புஷ்பா' படம் மூலம் ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்த நடிகையான ராஷ்மிகாவை அங்குள்ள அவரது ரசிகர்கள் வரவேற்று வாழ்த்தியுள்ளனர். அவரை சந்தித்த புகைப்படங்களையும் ரசிகர்கள் சிலர் பதிவிட்டுள்ளனர். அவர்களது அன்பிற்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துள்ளார் ராஷ்மிகா.
இந்திய நடிகைகளில் ஒரு சிலருக்குத்தான் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். தனக்கும் அங்கு ரசிகர்கள் இருப்பது குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.