அதிமுகவின் மகளிரணி துணைச் செயலாளரான நடிகை காயத்ரி ரகுராம்!
ADDED : 596 days ago
தமிழக பா.ஜ.,வில் இடம் பெற்றிருந்த நடிகை காயத்ரி ரகுராம் அந்த கட்சியில் ஏற்பட்ட சில பிரச்னை காரணமாக அங்கிருந்து வெளியேறினார். பின்னர், கடந்த ஜனவரி 19ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் தற்போது அவருக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் மகளிரணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இது குறித்த தகவலை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் நடிகை காயத்ரி ரகுராம், ‛அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி துணை செயலாளராக என்னை நியமித்திருக்கும் இ.பி.எஸ்.,க்கு நெஞ்சார்ந்த நன்றி' என்று பதிவிட்டு இருக்கிறார்.