சத்யப்ரியாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எதிர்நீச்சல் குழு
ADDED : 577 days ago
தென்னிந்திய திரையுலகின் மூத்த நடிகையான சத்யப்ரியா தமிழ் மொழியில் மட்டும் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதர மொழிகள் சேர்த்து 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள சத்யப்ரியா தற்போது சின்னத்திரையில் களமிறங்கி கலக்கி வருகிறார். அந்த வகையில் எதிர்நீச்சல் என்ற தொடரில் விசாலாட்சி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவருக்கு, எதிர்நீச்சல் சீரியல் குழுவினர் சர்ப்ரைஸாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த செலிப்ரேஷன் வீடியோவை கமலேஷ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர சத்ய ப்ரியாவுக்கு ரசிகர்கள் உட்பட பலரும் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.