மணிரத்னத்தின் ‛தக்லைப்' படத்தில் இணையும் சிம்பு?
ADDED : 573 days ago
தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தக்லைப் என்ற படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இப்படத்தில் கலெக்டர் வேடத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்த துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்னை காரணமாக வெளியேறி விட்டார். இதனால் அவர் நடிக்க இருந்த வேடத்தில் தெலுங்கு நடிகர் நானி நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது சிம்புவிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ‛செக்கச் சிவந்த வானம்' என்ற படத்தில் நடித்துள்ள சிம்பு, இந்த ‛தக்லைப்' படத்தில் இணைந்தால் முதல் முறையாக கமல்ஹாசன் உடன் அவர் இணையும் படம் இதுவாக இருக்கும். மேலும் சிம்பு நடிக்கும் 48வது படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.