விஷ்ணு விஷால் ஜோடியாகிறார் மமிதா பைஜூ
ADDED : 575 days ago
மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரொமான்டிக் படமாக வெளியான 'பிரேமலு', ரசிகர்களின் வரவேற்பை பெற்று நூறு கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது. சமீபத்தில் தெலுங்கில் வெளியான இந்த படம் இந்தவாரம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளார் நடிகை மமிதா பைஜூ. இவர் தற்போது ஜிவி பிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள ரெபல் திரைப்படம் வரும் மார்ச் 22ம் தேதி வெளியாக இருக்கிறது.
அது மட்டுமல்ல அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் அவருக்கு தேடிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் டைரக்ஷனில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருக்கிறார் என்கிற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.