உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வழக்கத்திற்கு மாறான பாணியில் படம் இயக்கும் ஜிமிக்கி கம்மல் இயக்குனர்

வழக்கத்திற்கு மாறான பாணியில் படம் இயக்கும் ஜிமிக்கி கம்மல் இயக்குனர்

மலையாள திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் லால் ஜோஸ். மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் என முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து படம் இயக்கியுள்ள இவர் துல்கர் சல்மானை வைத்து விக்கிரமாதித்யன் என்கிற ஹிட் படத்தை கொடுத்தார். பல கதாநாயகிகளை அறிமுகப்படுத்தியவர். மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய 'முந்திரிவல்லிகள் தளிர்க்கும் போல்' என்கிற படத்தில் இடம்பெற்ற 'ஜிமிக்கி கம்மல்' பாடல் எந்த அளவிற்கு சூப்பர் ஹிட் ஆனது என்பது ரசிகர்கள் அறிந்த வரலாறு.

சமீபகாலமாக ஒரு நடிகராகவும் மாறியுள்ள லால் ஜோஸ் தமிழில் வெளியான ஜிப்ஸி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பி உள்ள லால் ஜோஸ், ‛கேஜிஎப்' பட தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் மலையாள படம் ஒன்றை இயக்குகிறார். இவரின் படங்கள் எப்போதுமே கவித்துவமாக, குடும்பப்பாங்கான சென்டிமென்ட்டான, முன்னேற தூண்டும் விதமான கதை அம்சம் கொண்ட படங்களாகவே இருக்கும்.

ஆனால், இந்த முறை அதிலிருந்து மாறுபட்டு ஒரு பழிவாங்கும் ஆக்ஷன் கதையை இயக்க உள்ளாராம் லால் ஜோஸ். ஒரு காடு மற்றும் அதன் அருகில் உள்ள கிராமத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகிறதாம். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது மட்டுமே இப்போது வரை வெளியாகி உள்ள அதிகாரப்பூர்வமான தகவல். இதில் நடிக்கும் நட்சத்திரங்கள் உள்ளிட்ட மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !