ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங்
ADDED : 577 days ago
சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்த ரகுல் பிரீத் சிங் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கிறார். கடந்த மாதம் 21ம் தேதி தனது காதலர் ஜாக்கி பக்னாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் வழக்கம்போல் நடிப்பை தொடர்ந்து வரும் அவர், உடல் வெயிட் போடாமல் இருக்க தீவிரமான ஒர்க்கவுட்டில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது தான் ஜிம்மில் தீவிரமான ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ரகுல் பிரீத் சிங். அதில், 65 கிலோ வெயிட் கொண்ட உடற்பயிற்சி சாதனத்தை தூக்கி பயிற்சி செய்யும் காட்சியும், இன்னும் பிற உடற்பயிற்சி செய்யும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.